|
|
பிரம்மப் பிரகாச மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் |
"வாயுணவு இந்ந அனித்திய உடலை வளர்ப்பதற்காக என்று யாவற்றிராளும் அறிவார்கள். ஆனால் செவியுணவு எது, அது எதற்காகத் தரப்பெற்றது என்பது தான் எவருக்கும் எட்டவில்லை. னித்திய தேகமெடுத்து வாழ்வதுதான் செவியுணவின் பலன் என்று இந்ந அகில உலகத்திற்கும் அறிவிக்கவே னாம் வந்நுள்ளோம். அந்ந வுணவை யார் கையில் தரப்பெற்று இந்ந உலக முழுதினுக்கும் வழங்ஙப்பெற வேண்டுமோ அவர்கள் கையிலே இறைவன் அதை ஒப்படைத்தாயிற்று. அந்நச் செவியுணவின் பலனை ஏராளமானபேர் இங்ஙு பெற்றிருக்கிறார்கள். இனியும் பெற விரும்புவோர் பெற்றுக் கொள்ளலாம்." |
|
"மனிதனின் அற்பவாழ்வு உடலை வளர்ப்பதற்காக இவனுக்கு உண்ண வாயைக் கொடுத்தான். ஆனால் கற்பகோடி காலப் பேரின்ப னித்திய உடல் வளர் வாழ்வினுக்காக இவனுக்குச் செவியைக் கொடுத்துள்ளான்.
வாயில் சுவை உணர்வது மிருகம் - செவியில் சுவை உணருவோர் தேவர்கள்." |
|
"மூக்கறிவு வளர்வதற்காகத்தான் தேக பரிசுத்தம். ஆலய வழிபாடு முதலியன எடுத்து வைக்கப் பெற்றது அதற்கே. மூக்கறிவு வளர - செவியறிவு வளரும். செவியறிவு வளர - ஜீவ அறிவு வளரும். ஜீவ அறிவு வளர வளர - மெய் அறிவுப் பயன் கைகுலுக்கப்பெறும். ஜீவனுக்கு மெய் உணர்ச்சி தைப்பது காது வழியாகத்தான். செவிச் சுவை உன் ஜீவனுக்கு உஷ்ணத்தையும் தேஜஸ்ஸையும் தருகிறது - கிளப்பி உண்டாக்குகிறது. செவிக்கு உணவு அருந்நுபவன் யோகத்தில் ஆழ்வான். வாய்க்கு உணவு அருந்நுபவன் பாபத்தில், துக்கத்தில் ஆழ்வான். செவிக்கு உணவு அருந்நுவது என்பது, ஞான சைதன்ய வார்த்தைகளை உள்ளம் சம்மதிக்கச் செவி மடுப்பது - யோகத்தைப் பெருக்கி சீவேசனாக்கும் செயலில் உன்னை விழுத்தாட்டுவது." |
|
"ஈசன் உன்னுள் பரிசுத்தமான – மாசு மருவு இல்லாத இடத்தில் குடிகொண்டிருக்கிறானல்லவா ? ஆகையால் அவனை - ஈசனைப் பற்றியே உன் செவிகள் சுவைத்துக் களிக்க வேண்டும். அப்பொழுதுதான் ஈசன் சக்தி உன் ஜீவனில் வளர்ச்சி அடைந்நு பிரகாசிக்கும். னீயும் ஈசனை அடைவாய். இல்லாவிட்டால், செவி உணவு பருகாவிட்டால் - எமனிடம் தான் னீ தள்ளப்படுவாய்.
அதுவுமன்றி னீ செவி உணவு பருகப்பருக ஈசனுடைய அனுக்கிரகம் கிட்டும். அப்படி ஈசனுடைய அனுக்கிரகம் கிட்டக்கிட்ட - உன் மூச்சு துண்டாடுவது னிறுத்தப்பெற்று உன் சுவாசம் வெளியே போகாமல் தங்ஙும்.
சதா ஈசன் சுவையையே செவிகளுக்கு விருந்நளித்து வந்நால் - சுவாசம் கட்டுப்பட்டு, னிஷ்டைக்கும் தவத்திற்கும் வழி பிறக்கும். இது உன் ஆசான் தயவாலதான் னடக்க வேண்டும். அவர்களுடைய அன்பைப் பெற்று - உன் பக்கம் அவர்கள் அன்பைப் பாயும்படி செய்து கொள்ள வேண்டும்." |